கோலாலம்பூர் | 21/8/2021
நாளை காலை 9.00 மணி முதல் கோலாலம்பூரில் உள்ள 88 சாலைகள் காவல்துறையால் மூடப்படும்.
இரண்டாவது #KeluarLawan பேரணி இரத்து செய்யப்பட்ட ப்ப்ப்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
மூடப்பட இருக்கும் சாலைகளின் பட்டியல் :
கடந்த மாதம் 31 ஆம் நாள் நடத்தப்பட்ட #Lawan முதல் பேரணி நடத்தப்பட்ட மஸ்ஜிட் ஜாமெக், மெர்டேக்கா சதுக்கம் ஆகிய இடங்களுக்குச் செல்லக் கூடிய அனைத்து சாலைகளும் மூடப்படும் என கோலாலாம்பூர் போக்குவரத்து செயலாக்கம் – புலனாய்புப் பிரிவு தலைவர் சரிஃபுடின் முகம்மட் சாலே தெரிவித்தார்.
மேலும், இரண்டாவது #KeluarLawan பேரணி இரத்து செய்யப்பட்டிருந்தாலும், அதில் கலந்து கொள்ளக் கூடாது என கோலாலம்பூர் மஜிஸ்திரேட் நீதிமன்றம் 34 பேர் மீது தடை ஆணை பிறப்பித்துள்ளது.
பட்டியலிடப்பட்ட அந்த 34 பேரும் நாளை முற்பகல் 11.30 மணிக்கு மெர்டேக்கா சதுக்கத்தில் இரண்டாவது #KeluarLawan பேரணிக்காக ஒன்று கூடுவார்கள் என நீதிமன்றம் கருதியதால் அந்தத் தடை ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதோடு மனித உயிர்களுக்கு ஆபத்து நேர்ந்து அது கலவரத்திற்கு வழ்ழி வகுக்கலாம் எனக் கருதப்படுவதால் அவ்வாணஐ உடனடியாக நடப்புக்கு வருவதாக கோலாலம்பூர் காலப்துறை முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட நீதிமன்ற ஆவணம் கூறுகிறது.
முன்னதாக, RapidKL நிறுவனம் கோலாலம்பூரில் இருக்கும் அதன் 34 தொடர்வண்டி நிலையங்களை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரைத் தற்காலிகமாக மூடுவதாக அறிவித்திருந்தது.

தடை செய்யப்பட்ட அந்த 34 பேரின் முழு பெயர்கள், அடையாள அட்டை எண்கள் மறைக்கப்படாமல் வெளியிடப்பட்டது குறித்து பல விமர்சனங்கள் வெளீவரத் தொடங்கியுள்ளன. ஒருவரின் தனிப்பட்டத் தகவல் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பட்டன.

அந்த 34 பேரும் முதலாவது #Lawan பேரணியில் கலந்து கொண்டது தொடர்பாகக் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டவர்கள் ஆவர்.
நீதிமன்றம் வெளியிட்ட அந்தத் தடை ஆணையை ஒவ்வொருவரின் வீட்டிற்கும் காவல்துறை நேரடியாகச் சென்று கொடுத்ததாக வழக்கறிஞர் இராஜ்சூரியன் தெரிவித்தார்.
பொது வெளியில் தனிப்பட்டத் தகவல்களை மறைக்கப்படாமல் வெளியிடப்பட்டதால், அது தவறாகக் கையாளப்படும் ஆபத்து இருப்பதாக இலக்கவியல் உரிமை ஆர்வலர் ஜேக் எஸ்.எம். கீ தெரிவித்தார்.
காவல் துறையால் பொது மக்கள் காக்கப்பட வேண்டுமே அன்றி, இது போன்று ஆபத்து விளைவிக்கக் கூடிய நடவடிக்கையை எடுக்ககூடாது என அவர் மேலும் சொன்னார்.


