கோலாலம்பூர் | 23/8/2021 :-
நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் பெஜுவாங் கட்சி 120 தொகுதிகள் வரையில் போட்டியிடும் என அதன் தோற்றுநரான துன் டாக்டர் மகாதீர் முகம்மது கூறியுள்ளார்.
இயங்கலை வாயிலாக The Malaysian Insightக்கு பேட்டியளித்த துன் மகாதீர் அவ்வாறு கூறினார்.
பெஜுவாங் கட்சி மலாய் காட்சி என்பதால் போட்டியிடவிருக்கும் அனைவரும் மலாய்க்காரர்கள் எனக் குறிப்பிட்டவர் விரிவானத் தகவல் ஏதும் அந்தப் பேட்டியில் குறிப்பிடவில்லை.
ஆனால், மலாய்க்காரர் அல்லாதோரும் இதற்கு ஆதரவு வழங்குவர் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்த மகாதீர், முமுந்தையக் காலங்களில் அம்னோவுக்கு சீனர்கள், இந்தியர்கள் ஆதரவு இருந்ததைச் சுட்டிக் காட்டினார்.
நல்ல அரசாங்கமாக அமைக்கப்படும்போது கண்டிப்பாக மக்கல் ஆதரிப்பார்கள் என அவர் கூறினார்.
அடுத்தப் பொதுத் தேர்தலை பல்முனைப் போட்டி நிலவலாம் எனவும் பெரும்பான்மையைக் கொண்டு அரசியல் கூட்டணிகளுக்கு அது பெரும் சவாலாகவும் அமையலாம் எனவும் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாகக் பதிவு பெற்ற பெஜுவாங் கட்சியின் உறுப்பினர்கள் ஊழல் குற்றங்களில் ஈடுபட்டதாக எந்தப் பதிவு இல்லை எனத் தெரிவித்தார்.
பெஜுபாங்கில் பெரும்பான்மையினர் புது முகங்களாக மட்டும் இல்லாமல் இளையோர்களாகவும் மோசமானப் பின்னணியை அற்றவர்களாகவும் இருப்பதாக துன் டாக்டர் மகாதீர் மேலும் சொன்னார்.


