கோலாலம்பூர், நவ.12-
ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டுதல், இறை வழிபாடு, பெரியோர்களிடம் ஆசி பெறுதல் போன்ற உயர் பண்புகள் மேலோங்கிட இத்தீபாவளியைக் கொண்டாடி மகிழ்வோம் என்கிறார் மலேசிய மக்கள் புகார் மையத்தின் தலைவர் டத்தோ சந்திர குமணன்.
பல்லினத்தைச் சேர்ந்த அண்டை அயலாரை அழைத்து விருந்து உபசரிப்பு நடத்துவது அவர்களுடனான உறவை வலுப்படுத்தும்.மக்களிடையிலான சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு மேலோங்க இத்தீபத் திருநாள் வழி வகுக்கிறது.
ஒற்றுமை, மகிழ்ச்சி, அரவணைப்பு போன்ற நேர்மறை கூறுகளோடு தீபாவளியைக் கொண்டாடி மகிழ்வோம்.
“அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள
