பரிவுமிக்க உணர்வை மேலோங்கச் செய்வோம்! – ஜோனாதன் வேலா

397

கோலாலம்பூர், நவ.12-
இந்தத் தீபாவளி திருநாளில் வறிய நிலையில் உள்ளவர்களை அரவணைக்கும் பரிவுமிக்க உணர்வை மேலோங்கச் செய்வோம் என்று சத்து கேமா சமூக சங்கத்தின் தலைவர் ஜோனாதன் வேலா கேட்டுக் கொண்டார்.

பிறர் நலன் காப்பது இப்பண்டிகையின் உன்னத நோக்கமாகும் .இதன் அடிப்படையில் சிரமப்படுவோருக்கு இயன்ற உதவிகள் புரிந்து அவர்கள் இல்லங்களிலும் தீபச் சுடர் ஏற்ற வேண்டும் என்றார் பிரதமரின் அரசியல் செயலாளரின் சிறப்பு அதிகாரியுமான ஜோனாதன்.

உறவுகள், நட்புகள் , அண்டை அயலார் என அனைவரையும் ஒன்றிணைக்கும் இத்தீபத் திருநாள் வழி ஐக்கியம் வலுப்பெறும்.

“அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்”