Homeசமூகம்சமூகம்அரசு  நிறுவனங்களில் அதிகமான நிதி முறைகேடுகள்!

அரசு  நிறுவனங்களில் அதிகமான நிதி முறைகேடுகள்!

புத்ரா ஜெயா, மே 19-மொத்தம் 1,875 அரசு சார்பு நிறுவனங்களில் நிதி மோசடிகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய தணிக்கையாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அரசு சார்பு நிறுவனங்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்ட பணத்தை அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய தணிக்கையாளர் டத்தோஸ்ரீ வான் சுராயா வான் முகமட் ராட்ஸி தெரிவித்தார்.

கூட்டரசு மற்றும் மாநில அரசு இலாகாக்களோடு அரசு சார்பு நிறுவன கணக்கு வழக்குகளிலும் தணிக்கை அலுவலம் தலையிட்டு மோசடி மற்றும் நிதி முறைகேடு நடவடிக்கைகளை தணிக்கை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

spot_img

latest articles

explore more