Homeஇந்தியா/ ஈழம்டொனால்ட் டிரம்புக்கு நாள்பட்ட நரம்பு பிரச்சனை! -வெள்ளை மாளிகை

டொனால்ட் டிரம்புக்கு நாள்பட்ட நரம்பு பிரச்சனை! -வெள்ளை மாளிகை

வாஷிங்டன், ஜூலை 18-

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு (79) கால்களில் வீக்கம் காரணமாக நாள்பட்ட நரம்பு பிரச்சனை (CVI) உறுதியானதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

வெள்ளை மாளிகையின் மருத்துவப் பிரிவு நடத்திய அல்ட்ராசவுண்ட் டாப்ளர் பரிசோதனையில் இது கண்டறியப்பட்டது.

70 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இது பொதுவானது என்று மருத்துவர் சீன் பார்பபெல்லா கூறினார். ஆழமான நரம்பு தடை அல்லது தமனி நோய் இல்லை. ஆய்வக பரிசோதனைகளும் இதய, சிறுநீரக பிரச்சனைகள் இல்லை என உறுதிப்படுத்தின.

நரம்பு வால்வுகள் செயலிழப்பால் இரத்தம் தேங்குவதால் இந்நோய் ஏற்படுகிறது. ஆண்டுக்கு 1,50,000 பேர் பாதிக்கப்படுகின்றனர். வீக்கம், வலி, தோல் மாற்றங்கள் இதன் அறிகுறிகள். சிகிச்சை நோயின் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும்.

டிரம்பின் கைகளில் காயங்கள் அடிக்கடி கை குலுக்குவதாலும், ஆஸ்பிரின் பயன்பாட்டாலும் ஏற்பட்டவை என்று செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more