அலோர்ஸ்டார், ஜூலை 28-
அனைத்துலகப் பள்ளி ஒன்றின் முன்னாள் ஊழியரான வி. இளங்கோ(56) என்பவர் 2020 பிப்ரவரியில் இருந்து ஜூலை வரை முன்னாள் பள்ளி நண்பரான சந்திரசேகரன் என்பவரிடமிருந்து மொத்தம் 1.3 மில்லியன் ரிங்கிட்டை மோசடி செய்து ஏமாற்றியதாக 58 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அனைத்துலக பள்ளி ஒன்றை நிறுவ தமது பள்ளி நண்பரான சந்திரசேகரரிடமிருந்து இளங்கோ பல்வேறு தவணைகளில் மேற்கண்ட பணத்தைப் பெற்று, அந்தப் பள்ளியை அமைத்துத் தர முடியாமல் போனதால், அவர் மீது மேற்கண்ட குற்றச்சாட்டுகள் அலோர் ஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன.
குற்றங்களை மறுத்து விசாரணை கோரிய இளங்கோவிற்கு 125,500 ரிங்கிட் பிணை விதிக்கப்பட்டது. இந்த வழக்கின் மறு செவிமடுப்பு ஆகஸ்டு 14ஆம் தேதி நடைபெறும்.
-பொன் முனியாண்டி


