ரஷ்யாவின் கம்சாய்க்கா கிழக்குக் கரையோரம் நிகழ்ந்த கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மலேசியாவில் சுனாமி பாதிப்பு எதுவும் இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
நேற்று காலை 7.24 மணிக்கு ரஷ்யாவின் மேற்குறிப்பிடப்பட்ட வட்டாரத்திலிருந்து 107 கிலோ மீட்டரில், 42 கிலோ மீட்டர் பூமிக்கு அடியில் கடுமையான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த நிலநடுக்கமானது ரிக்டர் கருவியில் 8.7ஆகப் பதிவாகி இருந்ததாகவும் அதனைத் தொடர்ந்து ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அதன் அதிர்வு உணரப்பட்டதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

