Homeகுற்றவியல்பாலர் பள்ளி பேருந்து விபத்து: ஓட்டுநரின் களைப்பு, தூக்கமின்மையே காரணம்! 

பாலர் பள்ளி பேருந்து விபத்து: ஓட்டுநரின் களைப்பு, தூக்கமின்மையே காரணம்! 

செர்டாங், ஆக.4- செர்டாங் புத்ரா பல்கலைக்கழகத்திற்கு அருகில் பாலர் பள்ளி பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியதில் ஓர் ஆசிரியையும் 3 மாணவர்களும் காயத்திற்குள்ளாயினர்.

அந்தச் சம்பவம் பற்றி விளக்கமளித்த செர்டாங் போலீஸ் தலைவர் ஃபாரிட் அமாட், சம்பந்தப்பட்ட ஓட்டுநருக்கு இதற்கு முன்னர் 13 போக்குவரத்து சம்மன்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் நடந்தபோது அவர் போதைப்பொருள் அல்லது மது போதையில் இருக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

ஓட்டுநர் களைப்பு, போதுமான தூக்கமின்மையாலும் அந்த விபத்து நடந்துள்ளதாகவும், கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென கண்ணயர்ந்த காரணத்தினால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக அவர் தெரிவித்தார்.

நண்பகல் 12.20 மணிக்கு விபத்து நடந்தபோது பேருந்தில் 5 ஆசிரியைகளும் 30 சிறார்களும் பயணம் செய்துள்ளனர்.

 

spot_img

latest articles

explore more