Homeகுற்றவியல்சிறுவன் திஷாந்த் கொலை:  தந்தை மீது கொலை குற்றச்சாட்டு! 

சிறுவன் திஷாந்த் கொலை:  தந்தை மீது கொலை குற்றச்சாட்டு! 

ஜெலுபு, ஆக. 7-

6 வயது மகன், திஷாந்த்தைக் கொலை செய்ததற்காக தந்தை எம்.அருண்குமார் மீது இன்று ஜெலுபு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் நோர்ஷஸ்வானி இஷாக் முன் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்ட பிறகு, 36 வயதான எம்.அருண்குமார் தனக்கெதிரான குற்றத்தைப் புரிந்து கொண்டதாக தலையசைத்தார்.

இருப்பினும், கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால் குற்றம்சாட்டப்பட்டவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

குற்றப்பத்திரிகையின்படி, ஜூலை 23 ஆம் தேதி காலை 9.02 மணி முதல் மதியம் 12.55 மணி வரை நெகிரி செம்பிலானில் உள்ள ஜாலான் ரொம்பின்-பஹாவ் 25ஆவது  கிலோமீட்டரில் திஷாந்த்தைக் என்ற சிறுவனைக் கொன்றதாக அந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பிலிருந்து வழக்கறிஞர் ஆஜராகவில்லை.

மேலும், எம்.அருண்குமாருக்கு ஜாமின் வழங்கப்படவில்லை.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் அவருக்கு மரண தண்டனை அல்லது அதிகபட்சமாக 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 12 பிரம்படிகள் விதிக்கப்படும்.

இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 10ஆம் தேதி சிரம்பான் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் செவிமடுக்கப்படும்.

-அஸ்வினி செந்தாமரை

spot_img

latest articles

explore more