கோலாலம்பூர், ஆக.9-
அண்மையில் மாரா கல்லூரிகளில் மாணவர்களிடையே பகடிவதை சம்பவங்கள் அதிகரித்து பல மாணவர்கள் கல்வி பயிலுவதில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
அது பற்றி தமது முகநூலில் குறிப்பிட்டுள்ள மாரா தலைவரான அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி, மாரா கல்லூரிகளின் தங்குமிடங்களில் கட்டொழுங்கு, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்விக்கான நல்ல சூழ்நிலை ஆகியவற்றைப் பேணிக் காக்கும் பொருட்டு பகடிவதையில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் நீக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அதனை எதிர்த்து பல பெற்றோர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி, சட்ட நடவடிக்கையை எடுக்கப் போவதாக அச்சுறுத்தி இருக்கும் வேளையில், அவற்றை தாம் கடுமையாக எதிர்க்கத் தயக்கம் காட்டப் போவதில்லை என்றும் அஷ்ராப் வாஜ்டி திட்டவட்டமாகக் கூறினார்.
-பொன் முனியாண்டி


