செப்பாங்:
சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து வேலைவாய்ப்பைத் திட்டங்களை உருவாக்கி வருவதாக அம்மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
15 நவம்பர் 2025 (சனிக்கிழமை) செப்பாங் மாவட்டத்தில் MyFutureJobs உடன் இணைந்து வேலைவாய்ப்பு கண்காட்சியை மாநில அரசு முன்னெடுத்துள்ளது இதற்கு சான்று என்றார் அவர்
இந்த நிகழ்ச்சியில் 29 முதலீட்டாளர்கள் கலந்து கொண்டு 4,797 வேலைவாய்ப்பை வழங்கவுள்ளனர்.
பல துறைகள் இதில் உள்ளடக்கம்
இதில் சிறு வணிகம், தகவல் தொழில்நுட்பம், நிர்வாகம், மனிதவளம் மற்றும் உணவுப் பான சேவை (F&B) போன்ற துறைகள் அடங்கும்.
இதில் 63.6% வேலைகள் மாதம் RM2,500க்குமேல் சம்பளம் வழங்குகின்றன. 80.9% வேலை வாய்ப்புகள் சிலாங்கூர் மாநிலத்திலேயே உள்ளன.
மாற்றுத் திறனாளிகளுக்கும் வாய்ப்பு
803 வேலைகள் குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கும் ஆதரவு தேவைப்படும் குழுக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்தக் கண்காட்சி மக்கள் உயர் தரமான வேலை வாய்ப்புகளை பெறும் வாய்ப்பை விரிவுபடுத்துகிறது.
மேலும், அரசு, தொழில் மற்றும் மக்களுக்கு இடையிலான இணைப்பை உருவாக்குகிறது.
ஐந்து நிறுவனங்கள் RM5,000 முதல் RM12,000 சம்பளத்தை வழங்கும். இந்த கண்காட்சி அரசு மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, உள்ளூர் தொழிற்பிடிப்பினை மேம்படுத்தும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது என்றார் அவர்.


