Homeசமூகம்சமூகம்வெட்ரன் பூப்பந்து போட்டி: பாலன் & பாபு இணை சாம்பியன்

வெட்ரன் பூப்பந்து போட்டி: பாலன் & பாபு இணை சாம்பியன்

காஜாங்:
கே.எஸ்.எஸ் காஜாங் சீனியர்ஸ் ஷட்டளர்ஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற 2025 தீபாவளி கிண்ணப் பூப்பந்து போட்டியில் பாலன் & பாபு இணை சாம்பியன் பட்டம் வென்றது.

இரண்டாம் இடத்தை குணா & ரகு இணை பெற்றனர். ஜெயராம் & ஆனந்த் இணை மூன்றாம் இடத்தையும், நான்காம் இடத்தை ஏஎஸ்பி அருண் & சேகரன் இணை பெற்றனர்.

முதல் முறையாக காஜாங் ஜஸ்மின் அரங்கில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது

இப்போட்டி நவம்பர் 15-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காஜாங் ஜஸ்மின் பூப்பந்து அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

சாம்பியன் பட்டம் வென்ற பாலன் & பாபு இணை

கே.எஸ்.எஸ் காஜாங் சீனியர்ஸ் ஷட்டளர்ஸ் ஏற்பாட்டில் முதல் முறையாக இப்போட்டி நடத்தப்பட்டதாக ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் சேகரன் தெரிவித்தார்.

50 மற்றும் 60 வயது பிரிவைச் சேர்ந்த ஆண் வீரர்கள் இரட்டையர் இணைப்பில் பங்கேற்றனர்.

வீரர்கள் இணை தேர்வு — வெளிப்படையான "குலுக்கள்" முறை

வீரர்கள் தங்களின் இணையைக் குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கும் முறையை இப்போட்டியில் வெளிப்படையாக நடைமுறைப்படுத்தியதாக விக்னேஸ்வரன் கூறினார்.

போட்டியைச் சிறப்பாக நடத்த உதவியதோடு ஆதரவு வழங்கிய சேது லையன் ஏஜென்சி, K2S, PLT ஆகியோருக்கு குணாளன் நன்றி தெரிவிக்கப்பட்டது.

ஓய்வு பெற்றவர்கள் வீட்டில் இருப்பதை விட இத்தகைய போட்டிகளில் கலந்து கொண்டு புதிய நட்புறவுகளை உருவாக்குவது தான் இப்போட்டியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றென மற்றொரு ஏற்பாட்டாளரான சேகரன் கூறினார்.

இந்த போட்டி வெற்றிகரமாக நடைபெற செமினி இந்திய விளையாட்டு கிளப் தலைவர் கே.எஸ். ராம் அனைத்து நிலைகளிலும் உதவிப் புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

latest articles

explore more