Homeமலேசியாஅசாம் பாகி பங்குகள் விவகாரம்: விசாரணை அறிக்கையை வெளிப்படையாக வெளியிட ரஃபிஸி கோரிக்கை

அசாம் பாகி பங்குகள் விவகாரம்: விசாரணை அறிக்கையை வெளிப்படையாக வெளியிட ரஃபிஸி கோரிக்கை

கோலாலம்பூர்:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாகி மீதான பங்குரிமை விவகாரம் குறித்த விசாரணை அறிக்கையை அரசாங்கம் உடனடியாகவும் வெளிப்படையாகவும் பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என்று பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி வலியுறுத்தியுள்ளார்.

இந்த விசாரணை ஏற்கனவே முடிவடைந்து அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அதன் விரிவான முடிவுகள் இன்னும் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் மூலம் மட்டுமே இதுவரை சில தகவல்கள் கிடைத்துள்ளன. அந்தத் தகவல்களின்படி, அசாம் பாகி விதிமுறைகளை மீறியுள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, அடுத்தகட்ட நடவடிக்கைக்காக இந்த விவகாரம் பொதுச் சேவைத் துறையின் (JPA) ஒழுங்குமுறை வாரியத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், முழுமையான விசாரணை அறிக்கையை வெளியிடுவதன் மூலமே இதில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் என்று ரஃபிஸி தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

spot_img

latest articles

explore more