ஷா அலாம்:
சிலாங்கூர், தாமான் கின்ராராவிலுள்ள “செகு சந்திரா” என்ற நபரின் வீட்டில் சேதம், வாகனங்களை எரித்தது,கொலை மிரட்டல் தொடர்பாக, மூளையாகச் செயல்பட்டவர் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தனிப்பட்ட அதிருப்தி காரணமாக நடந்த இந்தச் சம்பவத்தில், முக்கிய நபர் உட்பட ஏழு பேர் தொடர்ந்து விசாரணையில் உள்ளனர்.
அந்நபர் மீதான அதிருப்தி, அவரால் ஏற்பட்ட மனவேதனை காரணமாக அவர்கள் அச்செயலை புரிந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஷாசெலி காஹார் கூறினார்.


