Homeமலேசியாஎல்-நினோ தாக்கம்: இந்த ஆண்டு உலகிலேயே மிக வெப்பமான ஆண்டாக அமையலாம்!

எல்-நினோ தாக்கம்: இந்த ஆண்டு உலகிலேயே மிக வெப்பமான ஆண்டாக அமையலாம்!

கோலாலம்பூர்:

எல்-நினோ (El-Nino) நிகழ்வு மற்றும் புவி வெப்பமடைதல் காரணமாக, இந்த ஆண்டு வரலாற்றிலேயே மிக அதிக வெப்பநிலை பதிவாகும் என்று காலநிலை நிபுணர் பேராசிரியர் எமரிட்டஸ் டாக்டர் ஃப்ரெடோலின் டாங்க் எச்சரித்தார்.

சுற்றுப்புற வெப்பநிலை 37°C முதல் 40°C வரை உயரக்கூடும். இந்த வெப்பமான சூழல் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி, இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க 90% வாய்ப்புள்ளது.

காற்றில் ஈரப்பதம் குறைந்து மிகவும் வறட்சியான மற்றும் கடுமையான வெப்பமான வானிலை நிலவும்.

பொதுமக்கள் போதிய அளவு தண்ணீர் குடித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதாக அவர் கூறினார்.

spot_img

latest articles

explore more