Homeமலேசியாபுந்தோங் இந்து மயானத்தில் மேலும் இரண்டு மின் அடுப்புகள் ( burner) நிர்மாணிக்கப்பட்டது.

புந்தோங் இந்து மயானத்தில் மேலும் இரண்டு மின் அடுப்புகள் ( burner) நிர்மாணிக்கப்பட்டது.

புந்தோங்:

புந்தோங்கில் உள்ள இந்து மயானத்தில் மேலும் இரண்டு மின் அடுப்புகள்( burner) நிர்மாணிக்க மத்திய அரசாங்கம் 13 லட்சம் வெள்ளி நிதி வழங்கியுள்ளதாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் கூறினார்

அதனை பராமரித்து வரும் ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா அந்த இரு மின் அடுப்புகள் நிர்மாணிப்பு பணியை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

பேராவில் அதிக இந்திர்கள் வாழும் இடமாக புந்தோங் உள்ளதால் மின் சுடலையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

ஏற்கனவே இதில் இரண்டு மின் அடுப்புகள்( burner) உள்ளது.

அது போதாது என்றங்குறைபாடுகள் நிலவியதால் சடலங்கள் மற்ற இனத்தவர்களின் மின் சுடலைக்கு எடுத்தைச் சென்று தகனம் செய்து வருகின்றனர்.

இந்ந குறைபாடுகளை போக்க மத்திய அரசாங்கம் புந்தோங் இந்து மயானத்தில் புதிய இரண்டு மின் சடலை நிர்மாணிக்க நிதி வழங்கியதாக குறிப்பிட்டார்.

அது போல பீடோரில் இந்து மயானத்தில் மின் சடலை நிர்மாணிக்க மத்திய அரசு வெ. 25 லட்சம் வழங்கியதாகவும் டத்தோ அ. சிவநேசன், புந்தோங் இந்த மயானத்தில் புதியதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மின் அடுப்புகளை(:burner) பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

இது தொடர்பாக கருத்துரைத்த
ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா தலைவர் ஆர். சீத்தாராமன் , இந்த புதிய மின் அடுப்புகள்( burner) வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் செயல்படும் என்று குறிப்பிட்டார்.

ஏற்கனவே இரண்டு மின் அடுப்புகள் உள்ளது. தேவைக்கு ஏற்ப இந்த இரண்டு அடுப்புகள் நிர்மாணிக்க நிதி வழங்கிய மத்திய அரசுக்கும் , ஆதரவு அளித்த மாநில அரசாங்கத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

பொது மக்க சடலங்களை தகனம் செய்ய போதிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, பொது மக்கள் போதிய ஆதரவை வழங்கும் படியும் மேலும் பட்டாசுகள் மற்றும் மது பாட்டில்கள் சவ பெட்டிக்குள் வைக்கவேண்டாம் என்ற ஆலோசனை வழங்கினார்.

—-

spot_img

latest articles

explore more