Homeமலேசியா2025 எஸ்பிஎம் முடிவுகள்: தேசிய சராசரி தேர்ச்சி விகிதம் 4.42-ஆக உயர்வு!

2025 எஸ்பிஎம் முடிவுகள்: தேசிய சராசரி தேர்ச்சி விகிதம் 4.42-ஆக உயர்வு!

கோலாலம்பூர்:

2025-ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் தேசிய சராசரி தேர்ச்சி விகிதம் (GPK) 4.42-ஆக உயர்ந்து சாதனை படைத்துள்ளதுடன், 94.29 சதவீத மாணவர்கள் சான்றிதழ் பெற தகுதி பெற்றுள்ளனர்.

அனைத்து பாடங்களிலும் சிறந்த தேர்ச்சி (A+, A, A-) பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 13,779-ஆக உயர்ந்துள்ளது.

நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கிடையிலான தேர்ச்சி இடைவெளி 0.04 புள்ளிகளாகக் குறைந்துள்ளது.

தேர்வு எழுத வராத மாணவர்களின் எண்ணிக்கையும் 5,032-ஆகக் குறைந்துள்ளதாக கல்வித்துறை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமட் அசாம் அகமட் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more