Homeகுற்றவியல்கடன் கேட்டதால் ஆத்திரம்: அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட நபர் கைது

கடன் கேட்டதால் ஆத்திரம்: அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட நபர் கைது

கோலா லங்காட்:

சிலாங்கூர், கோலா லங்காட் உணவகம் ஒன்றில் சாப்பாட்டுக் கடனைத் திருப்பி கேட்ட ஊழியரை அரிவாளால் மிரட்டி, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய 30 வயது மதிக்கத்தக்க வேலையற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

தடுக்க வந்த போலீசாரையும் அரிவாளால் தாக்க முயன்ற அந்த நபர் மீது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்நபர் மீது ஏற்கனவே போதைப்பொருள் மற்றும் குற்றப்பின்னணி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

spot_img

latest articles

explore more