கோலாலம்பூர்:

குடும்ப பிணைப்புகளையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் ஒரு கொண்டாட்டம் என்பதைத் தாண்டி புத்தாண்டு என்பது இந்திய சமூகத்தினரிடையே நிலவும் தெளிவு, மனவுறுதி மற்றும் நம்பிக்கையால் உந்தப்பட்டு புதிய முயற்சிகளுக்கும் தனிப்பட்ட தீர்மானங்களுக்கும் ஒரு புத்துணர்ச்சியான தொடக்கத்தைக் குறிக்கிறது.

மலேசியர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடும் விதமாக, டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியத் தளங்களில் தனதுகுடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் கண்டு களிக்க, அற்புதமான உள்ளூர் மற்றும் சர்வதேசப் பண்டிகை கால முதல் ஒளிபரப்புகளை வழங்குவதில் ஆஸ்ட்ரோ பெருமகிழ்ச்சி அடைகிறது.

ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “புத்தாண்டு என்பது ஒரு புதிய ஆண்டின் தொடக்கத்தை விட மேலானது – பகிரப்பட்ட மரபுகள், பண்புகள் மற்றும் நம்பிக்கையில் வேரூன்றியப், போற்றப்படும் சமூக ஒன்றுகூடல்கள் மூலம் எல்லைகளைக் கடந்து குடும்பத்துடன் மீண்டும் இணையும் ஒரு சக்திவாய்ந்த தருணமாகும்.

இந்தப் பண்டிகைக் காலத்தில், மலேசியக் குடும்பங்கள் ஒன்றாகப் பண்டிகையைக் கொண்டாடும் வேளையில், அவர்களுக்கு அர்த்தமுள்ள பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்கும் விதமாக, உள்ளூர் மற்றும் சர்வதேச அளவிலான விறுவிறுப்பான உள்ளடக்கங்களை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அனைத்துத் தளங்களிலும் அனைவருக்கும் ஏற்ற ஒன்றை வழங்கும் விதமாக எங்களின் பண்டிகைக்கால உள்ளடக்கத் தொகுப்பில் தொலைக்காட்சித் திரைப்படங்கள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகள், பத்திரிகை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் பலவும் அடங்கும். தொடர்ந்து ஆதரவளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு எங்களின் ஆழ்ந்த நன்றியைத் தெரிவிப்பதோடு பாண்டிகளைக் கொண்டாடும் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் – சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள், விஷு ஆஷம்சகள், வைசாகி தி லக் லக் வதை ஹோவ், மற்றும் உகாதி சுபகாஞ்சலு.”

ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள், ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா உள்ளிட்டவற்றில் கவர்ச்சிகரமான உள்ளூர் தமிழ் முதல் ஒளிபரப்புகளைக் கண்டு மகிழலாம்:
சித்திரை சிறப்பு ராசிபலன் என்ற ஜோதிட நிகழ்ச்சி, 12 ராசிகளுக்கும் புத்தாண்டுக் கணிப்புகளையும் உள்நோக்கங்களையும் வழங்குகிறது. உள்ளூர் திறமையாளர் அருள் தொகுத்து வழங்கும், ஜோதிடர் டாக்டர் பாணி இடம்பெறும் இந்த நிகழ்ச்சி, ஏப்ரல் 14 காலை 10 மணிக்கு முதல் ஒளிபரப்பாகும்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் முக்கியத்துவம் குறித்த விரிவானத் தகவல்களை வழங்கும் ஒரு தகவல் நிறைந்த இதழ் நிகழ்ச்சியான புத்தாண்டு சிறப்பு சஞ்சிகை, திறமையான உள்ளூர் கலைஞர்களான நவீன்குமார் மற்றும் சாந்தினி ஆகியோரால் தொகுத்து வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 14 இரவு 10 மணிக்கு முதல் ஒளிபரப்பாகும்.
ஐடில்ஃபித்ரி முகமது யூனோஸ் இயக்கிய ஒரு புதிரானச் செயற்கை நுண்ணறிவு சார்ந்தத் தொலைக்காட்சித் திரைப்படமான அழைக்காமல் வந்தாய், தேவகுரு, லிஷாலினி மற்றும் பவித்ரா ஆகிய நடிகர்களைச் சித்தறிக்கிறது. இக்கதை, ஈஷாவின் கணவரான ஜீவன், ஒரு திட்டத்திற்காக நைரா என்றச் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலானப் பெண்ணை ரகசியமாக உருவாக்கியதால் ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகளை மையமாகக் கொண்டுள்ளது. நைராவுக்கு ஜீவன் மீது காதல் உணர்வுகள் உருவாகி, ஈஷாவை ஒரு அச்சுறுத்தலாகக் கருதும்போது, ​​நிலைமைக் குழப்பமானத் திருப்பத்தை அடைகிறது. அழைக்காமல் வந்தாய் ஏப்ரல் 18 இரவு 10 மணிக்கு முதல் ஒளிபரப்பாகிறது.

ஏப்ரல் 14 மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் சுகி சிவத்தின் பார்வையில் சோழ ராஜ்யம் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி, மதியம் 2.30 மணிக்கு இந்தியச் சினிமாவில் கே. பாக்யராஜின் 50 பொன் ஆண்டுகளைக் கொண்டாடும் சிறப்பு நிகழ்ச்சி, ஏப்ரல் 16 இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் தலைவர் தம்பி தலைமையில் அதிரடி நகைச்சுவைத் திரைப்படம், ஏப்ரல் 17 இரவு 10 மணிக்கு காந்தி டாக்ஸ் என்றத் திரைப்பட விமர்சன நிகழ்ச்சி, மற்றும் ஏப்ரல் 18 இரவு 9 மணிக்கு ராஜா ரப்சோடி என்ற இசை நிகழ்ச்சி ஆகியச் சர்வதேச அளவில் பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்கள் ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் கண்டு மகிழலாம். மேலும், ஏப்ரல் 14 மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் அதிரடிக் காவியமானக் கதர்: ஏக் பிரேம் கதா மற்றும் அதைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் அதிரடி நாடகமானச் சிங் சாப் தி கிரேட் ஆகியப் பிளாக்பஸ்டர் திரைப்படங்களை ஜீ சினிமா (அலைவரிசை 251)-இல் இந்தித் திரைப்பட ரசிகர்கள் கண்டு மகிழலாம். இதற்கிடையில், ஏப்ரல் 15 பிற்பகல் 3 மணிக்கு திரையிடப்படும் வரலாற்று அதிரடி நாடகமான மரக்கார் மற்றும் அதே நாளில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் அதிரடி நகைச்சுவைத் திரைப்படமான ஆவேஷம் ஆகியப் பிரபலமான மலையாளத் திரைப்படங்களை ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) ஒளிபரப்பும்.

எளிதான ஸ்ட்ரீமிங் மற்றும் முடிவற்றப் பொழுதுபோக்கை வழங்கும், இப்போது ரிம49.99* இலிருந்துக் கிடைக்கும் அதிக மதிப்புடைய ஆஸ்ட்ரோ ஒன் (Astro One) தொகுப்புகளை அனுபவிக்க வாடிக்கையாளர்களை ஆஸ்ட்ரோ அழைக்கிறது. ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் astro.com.my அணுகலாம் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம் செய்தி அனுப்பலாம். மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.
*விலைகள் வரியை உள்ளடக்கவில்லை. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.