கோலாலம்பூர்:

மலேசியாவின் முன்னணி உள்ளடக்க மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான ஆஸ்ட்ரோ, பக்கத்து வீடு என்ற சுவாரஸ்யமான ஆவணப்படத்தின் மூலம் சமூக வாழ்வின் ஆழத்தை ஆராய்ந்து, அக்கம்பக்கத்து இயக்கவியலை வெளிக்கொணர்கிறது. இந்த ஆவணப்படம் ஏப்ரல் 17 இரவு 9.30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்பு காண்கிறது.

திறமையான உள்ளூர் இயக்குநர் சந்தோஷ் கேசவன் இயக்கிய இந்த ஆவணப்படம், பெரும்பாலும் குழப்பமான, நகைச்சுவையான மற்றும் நெகிழ்ச்சியான அண்டை அயலாரின் உலகத்தையும், அவர்கள் நம் வாழ்வில் கொண்டுவரும் தாக்கத்தையும் ஆழமாக ஆராய்கிறது.

கவர்ச்சிகரமான இந்த நிகழ்ச்சி, நிஜ வாழ்க்கையில் ஏற்படும் அண்டை அயலாரின் மோதல்களையும் அவர்களின் விசித்திரமான குணங்களையும் எடுத்துக்காட்டி, நகைச்சுவை மற்றும் நிபுணர் வழிகாட்டுதலின் மூலம் ஆக்கப்பூர்வமான தீர்வுகளை வழங்குகிறது.

13 அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர், அண்டை வீட்டுப் பிள்ளைகளுக்கு இடையேயான காதல் உறவுகள், செல்லப்பிராணிகளின் அதிகப்படியான இரைச்சல், பகிரப்பட்ட தெரு வாகன நிறுத்துமிடம் குறித்த தகராறுகள், குறுகிய கால வாடகைகள், இரைச்சலான வீட்டுப் புனரமைப்புகள், குற்றச் செயல்கள், மோசமான கழிவு நிர்வகிப்பு, தீர்க்கப்படாத சொத்து பிரச்சினைகள் உட்பட அண்டை வீட்டார் எதிர்கொள்ளும் பொதுவான மற்றும் விசித்திரமான பிரச்சினைகளை ஆராய்கிறது.

பக்கத்து வீடு, அக்கம்பக்கத்திலும் பரந்தச் சமூகத்திலும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும் பண்புகளைப் புகட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவற்றில் திறமையான தகவல் தொடர்பு, வரம்புகளை மதித்தல், பரஸ்பர மரியாதை, ஒத்துழைப்பு, அறநெறி சார்ந்த நடத்தை, பச்சாதாபம் மற்றும் பலவும் அடங்கும்.

பக்கத்து வீடு தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 9.30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு மகிழலாம் .

எளிதான ஸ்ட்ரீமிங் மற்றும் முடிவற்ற பொழுதுபோக்கை வழங்கும். இப்போது ரிம49.99இலிருந்து கிடைக்கும் அதிக மதிப்புடைய ஆஸ்ட்ரோ ஒன் (Astro One) தொகுப்புகளை அனுபவிக்க வாடிக்கையாளர்களை ஆஸ்ட்ரோ அழைக்கிறது.

ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் astro.com.my அணுகலாம் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம் செய்தி அனுப்பலாம். மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வரலாம்.