Homeஅரசியல்ஆகஸ்டுக்கு பின்னரே, கெடா சட்டமன்றத் தேர்தல்!

ஆகஸ்டுக்கு பின்னரே, கெடா சட்டமன்றத் தேர்தல்!

சுங்கைப்பட்டாணி:

நடப்பு சட்டமன்றத்தின் 36 மாத கால அவகாசம் முடிவடைவதால், கெடா மாநிலத் தேர்தல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னரே நடைபெறும் என்று மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனுசி நோர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் செலவுகளைக் குறைக்க, மாநில மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நாடு தழுவிய அளவில் ஒரே நேரத்தில் நடத்துவதற்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கருத்துக்கும் அவர் ஆதரவு தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்பதால், தங்களின் சேவை சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல தயாராக இருக்குமாறு கட்சி இயந்திரங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

spot_img

latest articles

explore more