ஜோர்ஜ்டவுன்:
சாலை வரியை குறைக்க அரசு பரிசீலனை!டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சுமையைக் குறைக்க, டீசல் வாகனங்களுக்கான சாலை வரியைக் குறைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இதற்கான தகுந்த வழிமுறைகளைக் கண்டறியுமாறு போக்குவரத்து அமைச்சை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மலேசியாவில் உள்ள சுமார் 1.8 மில்லியன் டீசல் வாகன உரிமையாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


