ஸூரிச்:
சுவிட்ஸர்லாந்து, ஸூரிச்சில் நடைபெற்ற கிராஸ்ஹாப்பர் கிண்ண ஸ்குவாஷ் போட்டியின் இறுதியாட்டத்தில், ஜப்பானின் சடோமி வதனாபேவை 2-3 என்ற கணக்கில் வீழ்த்தி, தேசிய வீராங்கனை எஸ். சிவசங்கரி வெற்றியாளர் விருதை வென்றார்.
ஆரம்பத்தில் 1-2 எனப் பின்தங்கியிருந்த போதிலும், மனவலிமையுடன் போராடி கடைசி இரண்டு செட்களையும் கைப்பற்றி அவர் வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் மூலம், உலகின் ஏழாம் நிலை வீரரான வதனாபேவுக்கு எதிரான தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய சிவகாசி சங்கரி, அவருடனான 8 சந்திப்புகளில் 7 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.
கடந்தாண்டு அதேப்போட்டியில் சிவசங்கரி இறுதியாட்டத்தில தோல்வி கண்டிருந்தார்.

