கோலாலம்பூர்:

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாரூனுக்கு அளித்து வந்த ஆதரவை 14 தேசிய முன்னணி (BN) சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக மீட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து அம்னோ மேலிடம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

இது தொடர்பாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமுடன் விரைவில் ஆலோசிக்கப்படும் என தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.