Homeஅரசியல்இந்தியச் சமூகத்திற்கான மடானி அரசின் நடவடிக்கைகள் செயல்பாடுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன: சிவமலர், குணராஜ் விளக்கம்

இந்தியச் சமூகத்திற்கான மடானி அரசின் நடவடிக்கைகள் செயல்பாடுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன: சிவமலர், குணராஜ் விளக்கம்

சிரம்பான்:

இந்தியச் சமூகத்திற்காக மடானி அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் வெறும் அறிவிப்புகளாக இல்லாமல், கல்வி, பொருளாதாரம், சமூக மேம்பாடு, தமிழ் மொழி, ஆலயங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நேரடி நடவடிக்கைகள் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான குணராஜ் ஜோர்ஜ் மற்றும் கெஅடிலான் கட்சியின் மத்திய தலைமைக் குழு உறுப்பினரும் துணைப் பொதுச் செயலாளருமான சிவமலர் கணபதி தெரிவித்தனர்.

2023-ஆம் ஆண்டு முதல் இந்தியச் சமூகத்தின் கல்வி, சமூகம், பொருளாதாரம், மொழி, கலாச்சாரம் மற்றும் நலன் சார்ந்த திட்டங்களுக்காக மடானி அரசாங்கம் மொத்தம் 597.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளதாக நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர்கள் தெரிவித்தனர்.

அதில், மித்ரா மூலம் கல்வி, தொழில்முனைவு மற்றும் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்காக 450 மில்லியன் ரிங்கிட், இந்தியச் சமூகத்தின் கல்வி நிறுவனங்களுக்காக எம்ஐஇடிக்கு 101 மில்லியன் ரிங்கிட், நாடு முழுவதும் 344 இந்து ஆலயங்களின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுக்காக வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சு வாயிலாக **46.5 மில்லியன் ரிங்கிட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக் காட்டினர்.

மேலும், இந்திய மாணவர்களின் கல்வியை வலுப்படுத்தும் வகையில், 6 தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய கட்டடங்கள் அமைக்க 30 மில்லியன் ரிங்கிட், 2023 முதல் 2026 வரை தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்புக்காக 130 மில்லியன் ரிங்கிட், தேப் கல்லூரிக்கு 2026-ஆம் ஆண்டில் 22 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

அதுமட்டுமல்லாமல், சமூக உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 20 மில்லியன் ரிங்கிட் மற்றும் தமிழ் மொழி வளர்ச்சி திட்டங்களுக்கு 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தனர்.

பொருளாதார ரீதியில், ஏஐஎம், தெக்கூன், பேங்க் ரக்யாட், எஸ்எம்இ வங்கி மற்றும் மீசி உள்ளிட்ட திட்டங்கள் மூலம் இந்திய சமூகத்திற்காக 555.6 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிதி வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனுடன் சமூக மேம்பாட்டுக்கான 597.5 மில்லியன் ரிங்கிட் சேர்த்து மொத்தம் 1.1531 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிதியை மடானி அரசாங்கம் இந்தியச் சமூகத்திற்கு வழங்கியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இது மட்டுமின்றி, எஸ்டிஆர், சாரா, பூடி மடானி, குறைந்தபட்ச ஊதிய உயர்வு, பள்ளி உதவித் தொகை உள்ளிட்ட அனைத்து இன மக்களுக்கும் வழங்கப்படும் திட்டங்களின் பயனையும் இந்தியச் சமூகத்தினர் பெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், ரிங்கிட்டின் மதிப்பு வலுப்பெற்றிருப்பது, வேலையின்மை விகிதம் குறைந்திருப்பது, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அதிகரித்திருப்பது மற்றும் முதலீடுகள் உயர்ந்திருப்பது போன்ற பொருளாதார முன்னேற்றங்களும் இந்திய சமூகத்திற்கு வேலைவாய்ப்புகளையும் பொருளாதார நன்மைகளையும் உருவாக்கியுள்ளதாக அவர்கள் சுட்டிக் காட்டினர்.

எதிர்வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில், மடானி அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் அடைவுநிலைகளை அடிப்படையாகக் கொண்டு மக்கள் முடிவெடுக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் வளர்ச்சியும் இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, மொழி மற்றும் கலாச்சார முன்னேற்றமும் தொடர பக்காத்தான் ஹராப்பானுக்கு மக்கள் மீண்டும் வாக்களிக்க வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

spot_img

latest articles

explore more