Homeவிளையாட்டு

விளையாட்டு

இளம் கால்பந்து வீரர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்த கோத்தா கெமுனிங் கால்பந்துப் போட்டி!

ஷா ஆலம், நவம்பர் 23: கோத்தா கெமுனிங் சட்டமன்ற மக்கள் சேவை மையம், MITRAA அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்த 2026ஆம் ஆண்டுக்கான கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி கால்பந்துக் கோப்பைப் போட்டி, கடந்த நவம்பர் 21ஆம் தேதி ஷா ஆலம், செக்ஷன் 17இல் உள்ள JKR விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. சுற்றுப்போட்டி முறையில் நடைபெற்ற இப்போட்டியில் ஏழு தொடக்கப்பள்ளிகளைச்...

ஜப்பான் ரோபோட்டிக் போட்டியில் 177 பதக்கங்களுடன் நாடு திரும்பிய 67 இந்திய மாணவர்கள்

கோலாலம்பூர், நவம்பர் 22 – ஜப்பானில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான அனைத்துலக ரோபோட்டிக் போட்டியில் 23 தங்கம் உட்பட மொத்தம் 177 பதக்கங்களை வென்ற 67 இந்திய மாணவர்கள் இன்று நாடு திரும்பினர். SYSCORE பயிற்சிக் கழகத்தின் சார்பில் இப்போட்டியில் பங்கேற்ற மாணவர்கள், செயற்கை நுண்ணறிவு (AI), ஆளில்லா விமானம் மற்றும் ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளனர். கடந்த...

IRONMAN 70.3 போட்டியில் களமிறங்கும் டத்தோ சிவராஜ் சந்திரன்!

லங்காவி: உலகப் புகழ்பெற்ற IRONMAN 70.3 முத்தரப்பு விளையாட்டுப் போட்டியில் மலேசிய இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் டத்தோ சிவராஜ் சந்திரன் பங்கேற்கவுள்ளார். வரும் நவம்பர் 21ஆம் தேதி (சனிக்கிழமை) கெடா மாநிலத்தின் லங்காவி தீவில் நடைபெறவுள்ள இப்போட்டியில், 65 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,000 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். மிகுந்த உடல் வலிமை, மன உறுதி மற்றும் விடாமுயற்சியைச் சோதிக்கும் இப்போட்டி மூன்று கடினமான விளையாட்டுப்...

350 இந்திய மாணவர்களுக்கு SYSCORE விருது; 67 பேர் ஜப்பான் போட்டிக்குத் தேர்வு

ஷா ஆலம், 31 அக்டோபர்: நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் மற்றும் இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 350 இந்திய மாணவர்கள், 2026ஆம் ஆண்டுக்கான SYSCORE இளம் ஆய்வாளர் விருதுகளைப் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளனர். இளம் தலைமுறையினரிடையே புத்தாக்கச் சிந்தனைகளையும் அறிவியல் ஆய்வுத் திறன்களையும் ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் இவ்விருது விழாவில், இவ்வாண்டு சுமார் 2,000 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் விருது பெற்ற மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 67 பேர், வரும் நவம்பர் மாதம்...

போர்த்துகல் அணியிலிருந்து விடைபெறவில்லை!

போர்த்துகல் கால்பந்து அணியிலிருந்து ஓய்வு பெறும் முடிவை தான் எடுக்கவில்லை என கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். போர்த்துகல் பயிற்சியாளர் ஜோர்ஜ் ஜீசஸ் தன்னிடம் அளித்த இரு வாக்குறுதிகளை நிறைவேற்றாததே அணியின் பயிற்சி முகாமிலிருந்து தான் வெளியேறியதற்குக் காரணம் என 41 வயதான ரொனால்டோ விளக்கமளித்துள்ளார். நோர்வேக்கு எதிரான போட்டியில் 30 நிமிடங்கள் விளையாடுவதாக தன்னிடம் கூறப்பட்டதாகவும், அதற்காக இடைவேளையிலிருந்து தயாராக இருந்தபோதிலும் களமிறக்கப்படவில்லை என்றும்...

மாற்றுத் திறனாளிகளுக்கும் உடற்கட்டழகு போட்டியில் வாய்ப்பு!

ஈப்போ FIF Mr Perak 2026 உடற்கட்டழகு போட்டியில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பிரிவும், Body Transformation பிரிவும் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. FIF Perak இயக்குநர் கலியப்பன் ரகுராமன் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் பங்கேற்கும் 11 பேரும் ஒருவருக்கொருவர் போட்டியிடாமல், அனைவரும் வெற்றியாளர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள் என்றார். அவர்களுக்கு கோப்பை, பதக்கம், ரொக்கப் பரிசு மற்றும் ஆதரவாளர்களின் பரிசுப் பொருட்களும் வழங்கப்படுகின்றன. ஒரே போட்டி பல பிரிவுகள் Body Transformation பிரிவில்...