Homeமலேசியாநீதிபதிகள் நியமனம்: நேர்மையும் அரசமைப்பு விதிகளும் பின்பற்றப்பட வேண்டும்! - சிலாங்கூர் சுல்தான் 

நீதிபதிகள் நியமனம்: நேர்மையும் அரசமைப்பு விதிகளும் பின்பற்றப்பட வேண்டும்! – சிலாங்கூர் சுல்தான் 

கோலாலம்பூர், ஜூலை 17-

கூட்டரசு, மேல் முறையீடு மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளின் நியமனம் அரசமைப்பு விதிகளுக்கு உட்பட்டு நேர்மையான, நியாயமான மற்றும் சுதந்திரமான முறையிலும் நியமிக்கப்பட வேண்டுமென மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தியுள்ளார்.

ஆட்சியாளர்களின் 269ஆவது கூட்டம் ஜுலை 16ஆம் தேதி தொடங்குவதற்கு முதல்நாள் விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், இதற்கு முன்னர் நீதிபதிகளின் நியமனம் குறித்து பேரரசரின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையைத் தாம் முழு மனதுடன் ஏற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

நீதிபதிகளின் நியமனங்கள் நியாயமாக மேற்கொள்ளப்படும் என்று தாம் உறுதியாக நம்புவதால், அது பற்றிய ஐயங்களையும் யார் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என்ற ஆதாரமற்ற ஆரூடத்தையும் கூறி நாட்டின் அரசாட்சிக்குக் களங்கம் கற்பிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் சுல்தான் அறிவுறுத்தினார்.

-பொன் முனியாண்டி

 

 

 

spot_img

latest articles

explore more