ஸ்கூடாய், ஜூலை 19-
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஜொகூர், ஸ்கூடாய் ஜாலான் ஹாங் ஜெபாட் 14, தாமான் உங்கு அமினா என்ற முகவரியில் உள்ள அடுக்குமாடி வீட்டில் தனித்து வாழ்ந்து வந்த கமலா மற்றும் சில்வராஜா ஆகிய இருவரையும் கொலை செய்ததாக எம். ஜெயகுமார் (39) என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இக்கொலை 2018 அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கி நவம்பர் 1ஆம் தேதி வரை நடந்ததாகக் கூறப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஜொகூர்பாரு உயர்நீதிமன்ற நீதிபதி அபு பாக்கார் காத்தார் தமது தீர்ப்பில், அந்தக் கொலைக்கு ஜெயகுமார்தான் காரணம் என்ற குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரமும் தடயமும் இல்லாததால் அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
அந்தக் குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமில்லாமல் அரசு தரப்பு நிரூபிக்கத் தவறியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
-பொன் முனியாண்டி


