Homeசமூகம்சமூகம்கோலகங்சார் இந்து சங்க பேரவையின் 47 ஆவது திருமுறை விழா! 

கோலகங்சார் இந்து சங்க பேரவையின் 47 ஆவது திருமுறை விழா! 

கோல கங்சார், ஜூலை 29-

பேராக், கோல கங்சார் இந்து சங்க பேரவையின் 47 ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கோலகங்சார் காந்தி நினைவு தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் .

சமய வளர்ச்சிக்குத் தொடர்ச்சியாக ஆக்கப்பூர்வ பங்களிப்பை வழங்கி வரும் கோல கங்சார் இந்து சங்க பேரவையை இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை புரிந்த மாநில இந்து சங்கத் தலைவர் சுந்தரசேகர் பெருமாள்  பாராட்டினார்.

இவ்வட்டாரத்தில் தமிழ்ப்பள்ளிகளிலும் , ஆலயங்களிலும் சமய வகுப்புகளை நடத்த இந்து சங்கங்கள் தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

சமய வளர்ச்சி மீது கவனம் செலுத்தி வரும் இந்து சங்க அமைப்புகள் சமுக நல சேவைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் கோல கங்சார் இந்து சங்க தலைவர் பா. நாராயணன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

 

 

spot_img

latest articles

explore more