Homeமலேசியாகூட்டரசு நீதிமன்ற மூத்த நீதிபதி நளினியின் பதவி காலம் நீட்டிப்பு! 

கூட்டரசு நீதிமன்ற மூத்த நீதிபதி நளினியின் பதவி காலம் நீட்டிப்பு! 

கோலாலம்பூர், ஆக.8-

கூட்டரசு நீதிமன்ற மூத்த நீதிபதி நளினி பத்மநாதனின் பதவிக்காலம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தனது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் நளினி பத்மநாதன் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வரை நீதிபதியாகச் செயல்படுவார்.

நளினி பத்மநாதனின் பதவிக்காலம் நீட்டிப்பிற்கு பேரரசர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் வழி இந்த ஆண்டு பதவிக்காலம் நீட்டிக்கப்படும் ஐந்தாவது நீதிபதியாக நளினி திகழ்கின்றார்.

ஆகஸ்ட் 23ஆம் தேதி நளினி பத்மநாதன் தனது 66 வயதில் கால்பதிக்கவுள்ளார்.

இது நீதிபதிகளின் கட்டாய ஓய்வு வயதாகும்.

நளினி 2007ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி நீதித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின், 2009ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார்.

கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி நளினி கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

-அஸ்வினி செந்தாமரை

 

spot_img

latest articles

explore more