Homeசமூகம்மகன்  தாக்கப்பட்டது  என்னை அச்சுறுத்தவே! -ரபிஸி ரம்லி

மகன்  தாக்கப்பட்டது  என்னை அச்சுறுத்தவே! -ரபிஸி ரம்லி

கோலாலம்பூர், ஆக.15 –

தமது  மகன் இரு அனாமதேய நபர்களால் தாக்கப்பட்ட வேளையில் மனைவி  அச்சுறுத்தப்பட்டதாக பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லி குற்றம் சாட்டியுள்ளார்.

தமது மனைவியும் மகனும் நேற்று மதியம் 1.45 மணியளவில் காரில் புத்ரா ஜெயாவில் உள்ள பேரங்காடிக்குச் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாங்கள் பயணித்த காரை பின் தொடர்ந்து சென்று  காரிலிருந்து இறங்கிய மகனை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து, சிரிஞ் ஒன்றினால் குத்திக் காயப்படுத்திய பின்னர் தப்பித்து ஓடியதாக ரபிஸி போலீஸில் புகார் செய்துள்ளார்.

சில விவகாரங்களைப் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டுவர தாம் செயல்படுதைத் தடுக்கும் நோக்கத்தில் அதிருப்தி கொண்ட சில தரப்பினர் இந்த அச்சுறுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார் .

எனினும், இதுபோன்ற அச்சுறுத்தும் மற்றும் அநாகரிக நடவடிக்கையானது தமது அரசியல் செயல்பாடுகளை எவ்வகையிலும் முடக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more