Homeகுற்றவியல்ஐந்தாண்டுகளில் வெ. 2,800 கோடி சொத்துகள் பறிமுதல்! 

ஐந்தாண்டுகளில் வெ. 2,800 கோடி சொத்துகள் பறிமுதல்! 

புத்ரா ஜெயா, ஆக. 15-

கடந்த ஐந்தாண்டுகளில் ஊழல் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட  3,140 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியிருப்பதோடு 2800 கோடி ரிங்கிட் மதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்திருப்பதாகவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைவர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட தொகையில் 18கோடி ரிங்கிட் பெறுமானமுள்ள கடத்தல் பொருள்களும் 62 கோடி ரிங்கிட் பெறுமானமுள்ள நிலச் சொத்துகளும் 36 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள வங்கிக் கணக்குகளும் அடக்கும் என்றார் அவர்.

அண்மையில் கூட ஒரு டான்ஸ்ரீக்குச் சொந்தமான 32 மில்லியன் விலையுயர்ந்த கடிகாரங்கள், 27 மோஸ்தர் கைப்பைகள் கைப்பற்றப்பட்டதாகவும் அஸாம் பாக்கி தெரிவித்தார்.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more