மம்பாங் டி அவான், நவ. 20-
நீரிழிவு போன்ற நோயை தொடக்கக் கட்டத்திலேயே கண்டறிவது உயிரைக் காப்பாற்ற உதவுவதோடு நீண்ட கால உடல்நல பாதிப்பில் இருந்து விடுபடவும் உதவும் என்கிறார் மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் பவானி ஷாஷா வீரையா.
வளமான குடும்பம் மற்றும் சமூகத்திற்கு உடல் ஆரோக்கியமே அஸ்திவாரம். ஆகையால், ஆரம்ப கட்ட பரிசோதனை நடவடிக்கைகள் உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த உதவும் என்றார்.
இதன் பொருட்டு நாளை 22ஆம் தேதி சனிக்கிழமை காலை 7.45 தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை கம்பார், மம்பாங் டி அவான், மாலிம் நாவார் சட்டமன்ற அலுவலக வளாகத்தில் இலவச நீரிழிவு, கண் பரிசோதனை மற்றும் அடிப்படை உடல் பரிசோதனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இலவச பரிசோதனை நடவடிக்கை மலேசிய மருத்துவ சங்கத்தின் பேராக் கிளை, கேஎம்சி மருத்துவ மையம், மலேசிய தமிழர் சங்கத்தின் கம்பார் கிளை மற்றும் மாலிம் நாவார் சட்டமன்ற அலுவலகம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாடாகும்.
இதில் திரளாகக் கலந்து கொண்டு பயனடையும்படி இவ்வட்டார மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


