Homeமலேசியாமலாய், இந்திய அரசு சாரா அமைப்புகள் இன நல்லிணக்கப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

மலாய், இந்திய அரசு சாரா அமைப்புகள் இன நல்லிணக்கப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

புத்ராஜெயா:

நாட்டில், மலாய் மற்றும் இந்திய சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசு சாரா அமைப்புகள், இரு தரப்புக்கும் இடையிலான இன ரீதியான பிரச்சினைகளைத் தீர்க்க விரிவான அமைதி முன்னெடுப்புகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘மடானி நல்லிணக்கத் திட்டத்தின்’ ஒரு பகுதியாக இந்த உரையாடல் அமர்வு இன்று புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையம் – PICC-யில் நடைபெற்றது.

மலாய் மற்றும் இந்திய சமூகங்களின் பிரதிநிதிகள் நேரடியாகப் பேசி, தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள ஒப்புக்கொண்டனர். வெளிநபர்களின் தூண்டுதல்களுக்கு இடமளிக்காமல் அமைதியை நிலைநாட்ட இது ஒரு முதல் படியாகும்.

மலேசிய முஸ்லிம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜைனுல் ரிஜால் அபு பக்கர் மற்றும் மலேசிய இந்து மற்றும் ஆலயங்கள் சங்கம் – மஹிமா தலைவர் டத்தோ என். சிவகுமார் ஆகியோர் இதில் முன்னிலை வகித்தனர். சுமார் 20 மலாய் பிரதிநிதிகளும் 10 இந்தியப் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

வழிபாட்டுத் தலங்களுக்கான நில தணிக்கையை (Land audit) மேற்கொள்வது மற்றும் பிரதமர் துறையின் கீழ் ஒரு சிறப்புக் குழுவை அமைப்பது போன்ற ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் இன உணர்வு சார்ந்த விஷயங்களைச் சுமுகமாகக் கையாள்வதே இதன் முக்கிய நோக்கமாகும். சில தனிநபர்களின் பொறுப்பற்ற செயல்கள் நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்க அனுமதிக்கக் கூடாது என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த நான்கு மணி நேர விவாதத்தில் முகமட் ஸம்ரி வினோத், சிக்கு சந்திரா, ஃபிர்டாவுஸ் வோங் மற்றும் குமரேசன் ஜோதி (சந்தனார் துரோணாச்சாரியார்) உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

spot_img

latest articles

explore more