புக்கிட் மெர்தாஜாம்:
பினாங்கு செபராங் ஜெயா மருத்துவமனை காப்பகத்தில் 4 மாத ஆண் குழந்தை உயிரிழந்த வழக்கில், 22 வயது சிசு காப்பாளர் மீது புக்கிட் மெர்தாஜாம் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மார்ச் 9-ஆம் தேதி அதிகாலை நிகழ்ந்ததாகக் கூறப்படும் இச்சம்பவத்தில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
முக்கிய அறிக்கைகளைப் பெறும் வகையில், இந்த வழக்கு ஜூன் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

