கோலாலம்பூர்:
காரின் பின்பகுதியில் கண்டெய்னரில் RON95 பெட்ரோல் நிரப்பிய பெண்ணின் காணொலி வைரலானது.
அது தொடர்பில், நிதி அமைச்சு விசாரணை நடத்தியது. அவர் விதிமுறைகளை மீறி Budi95 மானியத்தை தவறாக பயன்படுத்தியதாக உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபரும் வாகன உரிமையாளரும் மானிய சலுகையிலிருந்து Budi 95 ரக பெட்ரோலை வாங்க தடை செய்யப்பட்டுள்ளனர்.


