ஜார்ஜ் டவுன்:
பினாங்கு, ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள கல்லறையில் நிர்வாணமாக ஆபாசச் செயலில் ஈடுபட்ட 30 மற்றும் 50 வயதுடைய ஆணையும் பெண்ணையும் போலிஸ் நேற்றிரவு கைது செய்தது.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதை அடுத்து, இவர்கள் இருவரும் கணவன்-மனைவி அல்ல என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் ஆபாசமாக நடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


