கோலாலம்பூர்:
டீசல் விலை மற்றும் பராமரிப்புச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்தால், பள்ளிப் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என மலேசிய பள்ளிப் பேருந்து சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மானியம் கிடைத்தாலும், நீண்ட கால விலை உயர்வு, சேவைத் தொடர்ச்சிக்கும் B40 குடும்பங்களின் நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சங்கம் அச்சம் தெரிவித்துள்ளது.


