கூலிம்:
கெடா, கூலிம் ஹைடெக் பார்க்கில், சட்டவிரோத குடியேறிகள் குறித்த செய்தி சேகரிப்புக்காக சென்றதற்காக தினத்தந்தி இணையதள செய்தியாளர் காளிதாஸ் சுப்பிரமணியம் இன்று கைது செய்யப்பட்டார்.
மலேசிய பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் செ.வெ.முத்தமிழ் மன்னன் அக்கைதுக்கு கண்டனம் தெரிவித்தார்.

செய்தியாளராக கடமையைச் செய்ததற்காக அவரை கைது செய்வது தேவையற்றது. காளிதாஸை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்விவகாரம் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்ஸிலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


