Homeமலேசியாரவாங் ஆலயத்தை இடிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தும் உத்தரவு ரத்து!

ரவாங் ஆலயத்தை இடிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தும் உத்தரவு ரத்து!

ஷா அலாம்:

சிலாங்கூர், ஷா ஆலம் உயர்நீதிமன்றம் செவ்வாயன்று, ரவாங் பெர்டானா பூங்காவிலுள்ள ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலயத்தை இடிக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு செலாயாங் மஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்பு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

விண்ணப்பதாரர் தாக்கல் செய்த குற்றவியல் சீராய்வு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சூரியாதி ஹசிமா முகமது ஹாஷிம், இந்த அதிரடி தீர்ப்பை வழங்கினார்.

இதன் மூலம் மஜிஸ்திரேட் நீதிமன்றம் இதற்கு முன் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் உள்ள சட்ட விதிகளின் அடிப்படையில், இரு தரப்பு வாதங்களையும் மற்றும் தொடர்புடைய ஆவணங்களையும் விரிவாக ஆராய்ந்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.

spot_img

latest articles

explore more