Homeமலேசியாகமிஷனாகவோ அல்லது வருமானமாகவோ எடுத்துக்கொள்ள அனுமதி இல்லை!

கமிஷனாகவோ அல்லது வருமானமாகவோ எடுத்துக்கொள்ள அனுமதி இல்லை!

கோலாலம்பூர்:

அரசு சாரா நிறுவனங்கள் (NGO) பொதுமக்களிடமிருந்து பெறும் நன்கொடையில் 30 சதவீதத்தை கமிஷனாகவோ அல்லது வருமானமாகவோ எடுத்துக்கொள்ள அனுமதி இல்லை என ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த 30% வரம்பு என்பது வாடகை, சம்பளம் மற்றும் மின்சாரம் போன்ற அந்த அமைப்பின் ஒட்டுமொத்த ஆண்டு நிர்வாகச் செலவினங்களுக்கு மட்டுமே பொருந்தும், திரட்டப்படும் மொத்த நிதியைக் குறிக்காது.

பொதுமக்களின் நிதியை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க, இந்த வழிகாட்டுதல் முறை அவசியமானது என தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

spot_img

latest articles

explore more