Homeமலேசியாஎன்னுடைய அரசியல் பிரவேசத்திற்கும் பெர்சேவிற்கும் தொடர்பில்லை! மரியா சின் அப்துல்லா

என்னுடைய அரசியல் பிரவேசத்திற்கும் பெர்சேவிற்கும் தொடர்பில்லை! மரியா சின் அப்துல்லா

கோலாலம்பூர், மார்ச் 7-
பெர்சே இயக்கத்தின் முன்னாள் தலைவரான மரியான் சின் அப்துல்லா தன்னுடைய அரசியல் பிரவேசத்திற்கும் பெர்சே அமைப்பிற்கும் தொடர்பில்லை என தெரிவித்தார்.

இது என்னுடைய தனிப்பட்ட முடிவு. பெர்சே அமைப்புடன் தொடர்பு படுத்தக்கூடாது. எங்களது பெர்சே நிகழ்ச்சிகளுக்கு எதிர்கட்சிகள் ஆதரவு அளித்ததால் அவர்கள் அவற்றில் கலந்துக்கொண்டனர். மாறாக, பெர்சே எதிர்கட்சிகளின் நோக்கத்திற்கு ஆதரவளிக்கவில்லை.

தேசிய முன்னணி எங்களுக்கு ஆதரவு அளிக்காததால் அவர்கள் எங்கள் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளவில்லை என இன்று நீதிமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மரியா சின் வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக பெர்சே 2.0 இயக்கத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். ஆயினும், அவர் எந்த கட்சியில் இணைவார் என்பதை தெரிவிக்கவில்லை.

நம்பிக்கைக் கூட்டணியின் சின்னத்தில் போட்டியிட விரும்பும் மரியா சின் கோரிக்கை தொடர்பில் அக்கூட்டணி கலந்தாலோசிக்கும் என அதன் தலைவர் துன் டாக்டர் மகாதீர் நேற்று கூறியிருந்தார். இந்நிலையில், பெர்சே இயக்கம் அதன் போராட்டத்தை தொடரும் என்றும் 14ஆவது பொதுத்தேர்தல் தூய்மையாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை அந்த அமைப்பு உறுதி செய்யும் என மரியா சின் சொன்னார்.

இதனிடையே, சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனோஸ் கூறுகையில், வரும் பொதுட்தேர்தலில் மரியா சின்னுக்கு வாக்காளர்களின் ஆதரவு கிடைக்காது என்றும் அவருக்கு யாரும் வாக்காளிக்க மாட்டார்கள் என்றும் கூறியதோடு அவர் காட்டில் போட்டியிட்டாலும் வெற்றி பெற மாட்டார். அவருக்கு குரங்குகள், மனிதக்குரங்குகள்தான் வாக்களிக்கும் என நக்கலாக கூறினார்.

spot_img

latest articles

explore more