Homeமலேசியா30 நாட்களில் பதில் கிடைக்கவில்லை என்றால் பெர்சத்து கட்சியின் பதிவு ரத்தாகும்- ஆர்.ஓ.எஸ் எச்சரிக்கை !

30 நாட்களில் பதில் கிடைக்கவில்லை என்றால் பெர்சத்து கட்சியின் பதிவு ரத்தாகும்- ஆர்.ஓ.எஸ் எச்சரிக்கை !

கோலாலம்பூர், மார்ச். 9 – 

 ஆர்.ஓ.எஸ். எனப்படும் சங்கங்களின் பதிவகம்  கோரியுள்ள விளக்கங்களையும், தேவையான ஆவணங்களையும் , 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்கத் தவறினால்  பிரிபூமி பெர்சத்து கட்சியின் பதிவு இரத்தாகும் என  எச்சரிக்கப்பட்டுள்ளது. பெர்சத்து கட்சியின் உறுப்பினர்கள் வழங்கிய புகார்களின் அடிப்படையில் ஆர்.ஓ.எஸ் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அந்த கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ ஷாருடின் மாட் சாலேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது.

அந்த கடிதத்துக்கு பெர்சத்து கட்சி இன்னமும் பதில் அளிக்காமல் உள்ளது. எனவே  தாங்கள் கோரியது போல் விளக்கங்களையும் தேவையான ஆவணங்களையும் சமர்பிக்கவில்லை என்றால் 30 நாட்களுக்குள் அந்த கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் என ஆர்.ஓ.எஸ் எச்சரித்துள்ளது. இந்த 30 நாட்களுக்கான கெடு பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் தொடங்குகிறது என அது மேலும் தெரிவித்துள்ளது.

சங்கங்களின் பதிவகத்தின் அமைப்பு சட்டத்தின்  கீழ் தேவையான விளக்கங்களை வழங்க ஏழு நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.எனினும் பெர்சத்து கட்சிக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக ஆர்.ஓ.எஸ் தலைமை இயக்குனர் சுராயாத்தி இப்ராஹிம் தெரிவித்தார்.

 

 

 

spot_img

latest articles

explore more