Homeஉலகம்வெளிப்புற அழுத்தங்களை சமாளிக்க மன உறுதி தேவை! ஆசியானுக்கு பிரதமர் வலியுறுத்து

வெளிப்புற அழுத்தங்களை சமாளிக்க மன உறுதி தேவை! ஆசியானுக்கு பிரதமர் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 9-

அமெரிக்காவின் இறக்குமதி வரி உட்பட வெளிப்புற அழுத்தங்கள், புவிசார் அரசியல் போன்ற விவகாரங்களைச் சமாளிக்க ஆசியானுக்கு மன உறுதி தேவை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

இவற்றை ஆசியான் நாடுகள் ஒற்றுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அன்வார் இன்று நடைபெறும் 58-ஆவது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

உலகில் வளர்ச்சியை உருவாக்க பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் யாவும் இப்போது அழுத்தம் கொடுக்கும், தனிமைப்படுத்தும் மற்றும் கட்டுப்படுத்தும் ஆயுதங்களாக மாறியிருப்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.

 

spot_img

latest articles

explore more