Homeகுற்றவியல்சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி கொலை: இருவர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி கொலை: இருவர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

செப்பாங், ஜூலை 9-

சைபர்ஜெயாவில் பல்கலைக்கழக மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரு முக்கிய சந்தேக நபர்கள் மீது நாளை (வியாழக்கிழமை) செப்பாங் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.

“20 வயதுடைய முதன்மை சந்தேக நபரான ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் ஆகிய இருவர் மீது, வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு பிரிவு 302, தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்படுவார்கள்.

இது மரண தண்டனைக்கு உட்படுத்தக்கூடிய குற்றமாகும்,” என செப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர், அசிஸ்டெண் கமிஷனர் நோர்ஹிசாம் பஹாமன் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

சரவாக்கைச் சேர்ந்த 20 வயது மாணவியான மனிஷாப்ரீத் கவுர், பிசியோதெரபி இளங்கலை பட்டப்படிப்பு பயின்று வந்தவர். இவர் ஜூன் 24 ஆம் தேதி காலை 10 மணியளவில், சைபர்ஜெயாவில் உள்ள தனது குடியிருப்பில், நண்பரால் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டாலும், கொலையின் பின்னணியில் தீய எண்ணம் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

spot_img

latest articles

explore more