Homeமலேசியாநஜிப்பிற்கான வீட்டுக் காவல் : அம்னோ தலைவர்களுடன் விவாதிக்கத் தயார்!  - அன்வார்

நஜிப்பிற்கான வீட்டுக் காவல் : அம்னோ தலைவர்களுடன் விவாதிக்கத் தயார்!  – அன்வார்

கோலாலம்பூர், ஜூலை 18-

நஜிப் துன் ரசாக்கின் எஞ்சிய கால சிறைத் தண்டனை வீட்டுக் காவலில் அனுபவிக்க வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ‘ரோயல் அட்டெண்டம்’ பற்றி அம்னோ தலைவர்களுடன் விவாதிக்கத் தாம் தயாராக இருப்பதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் அம்னோ வட்டாரத்தில் பேசு பொருளாக உருவாகி இருப்பதால், அமைதியை நிலைநாட்ட தாம் அதற்கான விளக்கத்தையும் அது சம்பந்தமான பிரச்சினைகளையும் விவாதிக்க முன் வருவதாக அவர் உறுதி கூறினார்.

நீதிபதிகள் நியமனத்தில் பேரரசர் ஒப்புதலை வழங்கி இருப்பதால் இந்த விவகாரத்தை மேலும் குழப்ப வேண்டாமென்றும் நீதிபதிகள் நியமன விவகாரத்தில் அரசியல் குறுக்கீடு எதுவும் இல்லையென்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

வான் அமாட் ஃபாரிட் வான் சாலே தலைமை நீதிபதியாகவும் அபு பக்கார் ஜாயிஸ் மேல் முறையீட்டு தலைமை நீதிபதியாகவும் அஸிஸா நவாவி சபா, சரவாக் தலைமை நீதிபதியாகவும் நியமிக்க பேரரசர் ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் அன்வார் தெரிவித்தார்.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more