Homeமலேசியாஅமெரிக்க புதிய தூதருக்கு எதிராக ஆளும் கட்சியினர் எதிர்ப்புப் பேரணி! 

அமெரிக்க புதிய தூதருக்கு எதிராக ஆளும் கட்சியினர் எதிர்ப்புப் பேரணி! 

கோலாலம்பூர், ஜூலை 18-

ஆளும் உறுப்புக் கட்சிகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பு அந்நாட்டு புதிய தூதருக்கு எதிராக இன்று மதியம் அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர்.

பாலஸ்தீனத்திற்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு எதிர்மறையான அறிக்கைகளை வெளியிட்டு வரும் நிக் அடாம் என்பவர் மலேசியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக நியமிக்கப்படவிருப்பதை எதிர்த்து பக்காத்தான் ஹராப்பான் உறுப்புக் கட்சிகளைச் சேர்ந்த 70 பேர் அந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.

‘நிக் அடாமை நிராகரியுங்கள்’, ‘நதியிலிருந்து கடல் வரை பாலஸ்தீனம் மலரும்’ என்ற சுலோகங்களை முழங்கியவாறு அது சம்பந்தமான மகஜர் ஒன்றை அமெரிக்க தூதரக அதிகாரியிடம் சமர்ப்பித்தனர்.

அமெரிக்க அரசியல்வாதி ஒருவரை தூதராக அனுப்புவதை விட ஓர் அரச தந்திரியே மலேசியாவின் கலாச்சாரத்தையும் எண்ண ஓட்டத்தையும் நன்கு புரிந்து கொள்ள முடியும் என்றும் பேரணி ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தினர்.

-பொன் முனியாண்டி

 

 

spot_img

latest articles

explore more