Homeசமூகம்மடானி அரசாங்கத்தின் மக்கள் நல திட்டங்கள்! 

மடானி அரசாங்கத்தின் மக்கள் நல திட்டங்கள்! 

கோலாலம்பூர், ஜூலை 31-

இன்று நாடாளுமன்றத்தில் 13ஆவது மலேசியத் திட்டத்தைத் தாக்கல் செய்த பிரதமர் அன்வார் இப்ராஹிம், இதுவரை மேற்கொள்ளப்பட்ட மடானி அரசாங்கத்தின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்தார்.

அத்திட்டங்களைச் செயலாக்குவதற்கு புதிய தொழில்துறை பெருந்திட்டம்(NIMP2030, தேசிய எரிபொருள் திட்டம் (NETR), தேசிய மின்னியல் சாதன விவேகத் திட்டம் (NSS), 2030ஆம் ஆண்டு டிவெட் (TVET) கொள்கை போன்றவை தோற்றுவிக்கப்பட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம், கூலிம் ஹை-டெக் பூங்காக்களோடு பேரா, சபா மற்றும் சரவாக்கில் அனைத்துலக அளவில் முதலீட்டாளர்களைக் கவர தொழில்துறை பூங்காக்களை உருவாக்கும் திட்டமும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஊழலை ஒழிக்கவும் அதிகாரத் துஷ்பிரயோகத்தை முடக்கவும் எம்ஏசிசி, தேசிய தணிக்கையியல் இலாகா, மலேசிய போட்டியியல் ஆணையம் போன்றவற்றை பலப்படுத்தும் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்க குறிப்பிட்ட பிரிவினருக்கு டீசல் மற்றும் மின் கட்டணக் குறைப்பு, ரஹ்மா ரொக்க உதவி, ரஹ்மா அடிப்படை உதவி போன்றவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

சாரா ரொக்க உதவி திட்டத்தில் தற்போது 5.4 மில்லியன் பயனாளிகள் பயன் பெறுவதாகவும் 18 வயதான அனைவருக்கும் ஒரு முறை 100 ரிங்கிட் ரொக்க உதவிக்கு 200 கோடி ரிங்கிட் ஓதுக்கப்பட்டுள்ளதோடு எஸ்டிஆர் மற்றும் சாரா உதவித் திட்டங்களுக்கு அரசு 1500 கோடி ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாக அன்வார் குறிப்பிட்டார்.

தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளமாக 1,700 ரிங்கிட் வழங்கப்படுவதாகவும் டிவெட் பயிற்சியாளர்களில் 95.6 விழுக்காட்டினருக்கு உடனடி வேலை வாய்ப்பு கிட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2025 ஜூலை வரை 1,776 மருத்துவ கிளினிக்குகளை மேம்படுத்த 560 மில்லியன் ரிங்கிட்டும் 1,368 போலீஸ் மற்றும் ஆயுதப்படையினரின் வீடமைப்பிற்கு கோடிக் கணக்கில் செலவிடப்பட்டுள்ளதோடு போலீஸாருக்கு 69,131 புதிய வீடுகளைக் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விவரித்தார்.

 

 

spot_img

latest articles

explore more