கோலாலம்பூர், ஜூலை 31-
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5ஆண்டு திட்டமான 13ஆவது மலேசியத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்தார்.
அத்திட்டமானது மலேசியாவை வலுவான தளத்தில் நிலைநிறுத்தி, பொருளாதாரத்தை வலுப்படுத்தி முழுமையான வளர்ச்சியை அடைய உந்து சக்தியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாழ்க்கைச் செலவின உயர்வு, உணவு பாதுகாப்பு, வேலையில்லாத் திண்டாட்டத்தைக் களைந்து அரசின் நடவடிக்கைகளை பன்மடங்கு அதிகரிக்க உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது சமூக, பொருளாதார மேம்பாட்டை உயர்த்துவதோடு உலகளாவிய புவிசார் பிரச்சினைகளை எதிர்கொண்டு, பொருளாதார நிச்சயமற்ற நிலையைச் சமாளித்து நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அன்வார் சுட்டிக் காட்டினார்.
இந்த 13ஆவது மலேசியத் திட்டத்தின் வெற்றியானது நாட்டை வளப்படுத்தி, கொள்கையுள்ள ஒருமைப்பாடுமிக்க சமுதாயத்தை உருவாக்குவதோடு உலகளாவிய நிலையில் மலேசியாவை உன்னத நிலையில் வைத்திருக்கும் என்றும் அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.
-பொன் முனியாண்டி


